தியாகதுருகம் சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :1964 days ago
தியாகதுருகம்: ஆண்டி கொட்டகையில் புதுப்பிக்கப்பட்ட சிவன் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.
தியாகதுருகம் அடுத்த ஆண்டி கொட்டகையில் கடந்தாண்டு பூமிக்கடியில் இருந்து சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டது. இதுகுறித்து தினமலரில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அப்பகுதி பக்தர்கள் ஒருங்கிணைந்து லிங்கத்தை மூலவராக வைத்து பாலாம்பிகை அம்மன் சமேத செம்பொன் ஜோதிநாதருக்கு கோயில் கட்டியுள்ளனர். இங்கு ஒவ்வொரு பிரதோஷ வழிபாடும் சிறப்பாக நடந்து வருகிறது. உடங்கு உத்தரவு காரணமாக பக்தர்கள் இன்றி நேற்று பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேகமும், மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.