மாசானியம்மன் கோவில் குழுவினர் உணவு வழங்கல்
ADDED :2043 days ago
குன்னூர்: குன்னூர் மாசானியம்மன் கோவில் சார்பில், காலை மற்றும் மதிய உணவு தினமும் வழங்கப்பட்டது.
கொரோனா, 144 தடை உத்தரவு தினத்தில் இருந்து இதுவரை, குன்னூரில் பணியாற்றி வந்த, ஓய்வு பெற்ற ராணுவத்தினர், போலீசார், தூய்மை பணியாளர்கள், சுகாதார துறை ஊழியர்களுக்கு காலை, மதியம் உணவு வழங்கப்பட்டன. மேலும், ரேலி காம்பவுன்ட், மாடல் ஹவுஸ், பழைய மருத்துவமனை சாலை பகுதியில் உள்ள குடும்பத்திருக்கு காய்கறிகள் வழங்கப்பட்டது. சேவா கேந்திர தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், கோவில் நிறுவனர் சுதர்சன், ஆனந்தகுமார், முரளீதரன் உட் பட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.