பழநி கோயில் வாசலில் நின்று பக்தர்கள் வழிபாடு
ADDED :2002 days ago
பழநி: பழநி பக்தர்கள் பெரும்பாலோர் முருகனை கோயிலில் வழிபட்ட பின்பே தினமும் தங்கள் அன்றாட வேலையை துவங்குவர்.
கொரோனா ஊரடங்கால் தற்போது கோயில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் பல பக்தர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இவர்கள் மாதம் தோறும் கார்த்திகை, சஷ்டி, பிரதோசம், மாதப்பிறப்பு நாட்களிலும், வாரம் தோறும் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கடந்த 60 நாட்களுக்கு மேலாக கோயில் பூட்டிக்கிடப்பதால் தரிசனம் செய்ய இயலவில்லை. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவித்த நிலையில் கோயில்களின் வெளிப்பகுதியில் நின்று கோபுர கலசத்தை வணங்கிச் செல்கின்றனர்.சிலர் கோயில் வாசலில் நின்று தரிசித்து செல்கின்றனர். பழநி கோயிலில் நேர்த்திக் கடன், வேண்டுதலை நிறைவேற்ற இயலாமல் தவிக்கின்றனர்.