திருப்பரங்குன்றத்தில் பாலாபிஷேகம் நடத்தப்படுமா?
ADDED :1955 days ago
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தன்று சுவாமிகளுக்கு பாலாபிஷேகம் நடத்தி இணையதளத்தில் ஒளிபரப்ப வேண்டும், என, பக்தர்கள் வலியுறுத்தினர்.பக்தர்கள் கூறியதாவது: இக்கோயிலில் கொரோனா ஊரடங்கால் பங்குனித் திருவிழாவையடுத்து வைகாசி விசாகத் திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ரத்தானாலும் ஆகமவிதிகளின்படி மீனாட்சி திருக்கல்யாணம் பட்டர்களால் நடந்தது. எனவே திருப்பரங்குன்றம் கோயிலில் விசாகத்தன்று (ஜூன் 4) சுவாமிக்கு பாலாபிஷேகம் நடத்த வேண்டும். பக்தர்கள் காண இணையத்தில் ஒளிபரப்ப வேண்டும், என்றனர்.