உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமலிங்க பிரதிஷ்டை விழா ரத்து பக்தர்கள் கண்டனம்

ராமலிங்க பிரதிஷ்டை விழா ரத்து பக்தர்கள் கண்டனம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோவிலில், ராமலிங்க பிரதிஷ்டை விழாவை ரத்து செய்ததற்கு, பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராமாயணத்தில், இலங்கையில் இருந்து திரும்பிய ராமர் - சீதை, ராமேஸ்வரம் கடற்கரை மணலில், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, தரிசித்தனர். இதைஅடுத்து, ராமநாத சுவாமி கோவில் உருவானது. இதை நினைவு கூரும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கோவிலில், ராமலிங்க பிரதிஷ்டை விழா நடக்கும்.ஊரடங்கால், மே, 30ல் நடத்த வேண்டிய ராவண சம்ஹாரம், இன்று நடக்க வேண்டிய ராமலிங்க பிரதிஷ்டை விழாவை, கோவில் நிர்வாகம் ரத்து செய்தது. இதற்கு, பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலர், ராமமூர்த்தி கூறுகையில், பலநுாறு ஆண்டுகளாக நடந்த ராமலிங்க விழாவை, கோவிலுக்குள் நடத்தி, ஆன்லைனில் பதிவிட்டு இருந்தால், பக்தர்கள் தரிசித்திருப்பர். ஆன்மிக மரபை மீறி, விழாவை ரத்து செய்தது கண்டனத்திற்குரியது. முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !