உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை ‘வைகாசி விசாகம்: விருப்பம் நிறைவேற முருகனை வழிபடுங்க..

நாளை ‘வைகாசி விசாகம்: விருப்பம் நிறைவேற முருகனை வழிபடுங்க..

வைகாசி மாதத்தில் சந்திரன் தன் முழு ஆற்றலுடன் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனால் இந்த மாதத்திற்கு வடமொழியில் ‘வைசாகம்’ என பெயர் சூட்டப்பட்டது. தமிழில் வைகாசி’ என்று மாறியது. இந்த பவுர்ணமி நன்னாளை ‘வைகாசி விசாகம்’ என கொண்டாடுகிறோம். முருகப்பெருமான் அவதாரம் இந்த நாளில் நிகழ்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.


விசாகத்தில் அவதரித்ததால் ‘விசாகன்’ என்று முருகனுக்குப் பெயருண்டு. ‘வி’ என்றால் ‘பறவை’ (மயில்), ‘சாகன்’ என்றால் ‘சஞ்சரிப்பவன்’ . மயில் மீது வலம் வரும் இறைவன் என்பது பொருள். முருகனால் சம்ஹாரம் செய்யப்பட்ட சூரபத்மனின் உடலின் ஒரு பகுதி மயிலாக மாறியது. அதையே முருகன் தனது வாகனமாக ஏற்றார். இந்தாண்டு நாளை(ஜூன்4ல்) விரதமிருந்து முருகனை வழிபட்டால் விருப்பம் நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !