உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகப்பெருமான் அவ்வையாரிடம் கேட்ட கேள்விகள்!

முருகப்பெருமான் அவ்வையாரிடம் கேட்ட கேள்விகள்!

உலகில் கொடியது எது?

வாழ விரும்புகிறவன் மனிதன். அவன் வாழ்க்கைக்குத் தேவையான வளங்கள் அவனிடத்தில் நிரம்பி இருக்க வேண்டும். அதுவன்றி,  அவனிடத்தில் வறுமை, வந்துவிட்டால், அது மிகவும் கொடியது. ஆனால் உணவு அன்பிலாத மனைவி அளிக்கும் உணவு அதைவிடக்  கொடியது என்றார். தமிழ் மூதாட்டி.

உலகில் இனியது எது?

இன்ப.. துன்பங்கள் ஆகிய இரண்டும் கலந்து வருவதே உலக வாழ்க்கை. இவற்றைத் தருவன புலன் இச்சை. ஆனால் புலன்களை  ஒடுக்கித் தனிமையாக இருந்து, மனத்தை நல்ல நெறியிலே செலுத்துவதுதான் இன்பம். ஆனால், அறிவுடையாரை கனவிலும் நனவிலும்  கண்டு இன்புறுவது அதனிலும் மிகவும் இன்பம் தருவதாகும்.

உலகில் பெரியது எது?

இறைவன் அடியார்கள் உள்ளத்தில் வசிக்கிறான். எனவே தொண்டர்களது பெருமைதான் உலகத்தில் மிகப் பெரியது என்றார்.

உலகில் அரியது எது?

மனிதராய்ப் பிறப்பது அரிது. அப்படிப் பிறந்தாலும் ஊமை, செவிடு, குருடு போன்ற குறைகள் நீங்கிப் பிறப்பது அரிது. அப்படி நன்றாகப்  பிறந்தாலும், ஞானமும் கல்வியும் நம்மை வந்தடைவது அரிதாகும். அவற்றை மேற்கொண்டால்தான் சுவர்க்கம் செல்வதற்கான வழி  கிடைக்கும் என்றார் அருந்தவ மூதாட்டி. இந்த அற்புதமான உலகியல் நீதிகளை ஔவையின் வாயால் நமக்காக எடுத்துரைக்க  வைத்தான் தன் தமிழின் மிகுநேயனான ஆறுமுகச் செல்வன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !