உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி

திருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி

திருப்பதி: திருலை திருப்பதி கோயிலில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. மத்திய அரசின் சில தளர்வுகள் காரணமாக வரும் 8 முதல் நாடு முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்களை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருமலை ஏழுமலையான் கோவிலிலும் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க ஆந்திர அரசிடம் தேவஸ்தானம் அனுமதி கோரியது. ஆந்திர அரசும் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. ஆந்திர அரசு நிபந்தனைகளின்படி திருமலையில் சமூக இடைவெளியை பின்பற்றுதல் பக்தர்கள் அதிக அளவில் நடமாடும் இடங்களில் கிருமிநாசினி தெளித்தல் தரிசன வரிசைகள் தடுப்பு வேலிகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்தல் முகக் கவசம் சானிடைசர் பயன்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. வரும் 10 ம் தேதி உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. வரும் 11ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் 3,000 தரிசன டிக்கெட்டுகளும், திருப்பாதி கவுண்டர்களில் 3,000 டிக்கெட்டுகளும் வழங்கப்படும். காலை 6.30 முதல் இரவு 7.30 வரை மட்டுமே தரிசனம் செய்ய முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதியில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !