மணக்குள விநாயகர் கோயில் திறப்பு: பக்தர்கள் தரிசனம்
ADDED :1954 days ago
புதுச்சேரி: கொரோனா ஊரடங்கு உத்தரவு முடிந்து இன்று 8ம் தேதி அனைத்து வழிபாட்டு ஸ்தலங்கள் திறக்க புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனால் புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோயில், மற்றும் பிறகோயில்கள் திறக்கப்பட்டன. மணக்குள விநாயகர் கோயிலில் பக்தர்கள் ஒவ்வெருவராக தெர்மா மீட்டர் பரிசோதனை செய்யப்பட்டு சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.