சிவாச்சாரியார்களுக்கு நிவாரண உதவி வழங்கல்
ADDED :1952 days ago
காரைக்கால் : திருநள்ளார் பகுதியில் ஊரடங்கு உத்தரவால் பாதித்த கோவில் சிவாச்சாரியார்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் கமலக்கண்ணன் வழங்கினார். காரைக்கால் மாவட்டத் தில் கொரோனா ஊரடங்கு உத்தரவால் அனைத்து கோவில்களும் மூடப்பட்டன. இதனால் கோவில்க ளில் பணி புரியும் சிவாச்சாரியார்கள, பட்டாச்சாரியார்கள், பூசாரிகள், இசைக் கலைஞர்கள் பாதித்தனர்.இதனால் நேற்று முன்தினம் திருநள்ளார் தியாகராஜர் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட திருக்கோயிலில் பணியாற்றும் சிவாச்சாரியார்கள், ஊழியர்கள் 110 பேருக்கு, நிவாரணப் பொருட்களை அமைச்சர் கமலக்கண்ணன் வழங்கினார்.