மடப்புரம் கோயில் உண்டியல் திறப்பு
ADDED :1995 days ago
திருப்புவனம்: மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவில் உண்டியல் எண்ணும் பணி நேற்று துவங்கியது. இங்கு நாண்கு மாதங்களுக்குப்பின் இப்பணி நடக்கிறது. இக்கோவில் தென்மாவட்ட அளவில் பிரசித்தி பெற்றதாகும். பரமக்குடி உதவி ஆணையர் சிவலிங்கம், சிவகங்கை ஆய்வாளர் சுந்தரேசுவரி முன்னிலையில் பணியாளர்கள் ஈடுபட்டனர். உண்டியலில் ரொக்கம் ரூ.12,71,104, தங்கம் 142 கிராம், 187 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.