உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் திருப்பணி குழு ஆலோசனை

ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் திருப்பணி குழு ஆலோசனை

ஈரோடு: ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் திருப்பணி குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடத்தது. ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் கும்பாபி?ஷக திருப்பணிகள், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. வண்ணம் தீட்டுதல், சிற்பங்கள் வரைதல், சுற்றுப்பிரகாரம், மூலவர் மண்டபம், அம்மன் மண்டம், கற்கள் பதித்து சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள், 70 சதவீதம் நடந்து முடிந்துள்ளது. பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், செயல் அலுவலர் கங்காதரன் தலைமையில் நடந்தது. பணிகள் விரைவாக முடிப்பது, யாகசாலை அமைப்பது, கும்பாபி ?ஷகம் எப்போது நடத்துவது என்பன குறித்து பேசப்பட்டது. அருள்நெறி திருக்கூட்ட அறக்கட்டளை நிர்வாகிகள், சிவாச்சரியார்கள், அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !