கோபுரம் உயரமாக இருப்பதன் நோக்கம் என்ன?
ADDED :1993 days ago
பிரபஞ்ச சக்தியின் (உலகத்தை ஆட்டுவிக்கும் சக்தி) பிரம்மாண்டத்தை உணர்த்துவதற்காக கோபுரத்தை உயரமாக கோயிலில் அமைத்தனர். பரம்பொருளான இறைவன் எல்லாவற்றையும் உள்ளடக்கியவர். அவரை ஒப்பிடும்போது நாமும், நம் பெருமையும் அணுவளவே என்ற பணிவை ஆண்டி முதல் அரசன் வரை அனைவரும் பெறவேண்டும் என்பதற்காக கோபுரங்கள் உயரமாக அமைக்கப்பட்டன. தெய்வாம்சம் கொண்ட கோபுரத்தைத் தரிசிப்பதால் கோடி புண்ணியம் என்றும் சிறப்பித்தனர்.