உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருச்சிகம்: பிள்ளைகளால் மகிழ்ச்சி

விருச்சிகம்: பிள்ளைகளால் மகிழ்ச்சி

உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் இருக்கும் புதன் ஜூன் 20 வரையும், ஜூலை 3க்கு பிறகும் நன்மை தருவார். இதனால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். குருபகவான் உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவர் ஜூலை 8ல் அதிசார நிவர்த்தி அடைந்து 2ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார்.  இது சிறப்பான அம்சம். இதனால் பிரச்னை அனைத்தும் இருக்குமிடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் நிலவிய குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும். மந்த நிலை மாறும். மனதில் துணிச்சல் பிறக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். குருவின் பார்வையால் குடும்பத்தில் செல்வாக்குடன் திகழ்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதரர்களால் மேன்மை கிடைக்கும். ஜூன் 21 –  ஜூலை 3 வரை  குடும்பத்தில் குழப்பம் நிலவும். கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். பெண்களால் குடும்பம் சிறந்து விளங்கும். ஜூலை 7க்கு பிறகு மனதில் உற்சாகம் பிறக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை ஏற்படும். சகோதரர்களால் பணஉதவி கிடைக்கும். செவ்வாயால் ஜூன் 17க்கு பிறகு உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம்.  பிள்ளைகள் நலனிலும் அக்கறை தேவை.சிறப்பான பலன்கள்* தொழிலதிபர்களுக்கு ஜூன் 17க்கு பிறகு குருவால் பொருளாதார வளம் அதிகரிக்கும். கடந்த காலத்தில் ஏற்பட்ட தீயோர் சேர்க்கை, பணவிரயம் முதலியன ஜூன் 28க்கு பிறகு மறையும். * வியாபாரிகள் ஜூலை 7க்கு பிறகு மறைமுகப்போட்டி, பகைவர் சதியில் இருந்து விடுபடுவர். எதிரிகள் சரணடையும் நிலை உருவாகும். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.* அரசு பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்க வாய்ப்புண்டு. சக ஊழியர்கள் ஆதரவுடன் நடப்பர்.* தனியார் துறை பணியாளர்கள் ஜூன் 20 வரையும், ஜூலை 3க்கு பிறகும் நற்பலன் காண்பர். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்* வக்கீல்களுக்கு ஜூலை 3க்கு பிறகு எதிர்பாராத வகையில் வருமானம் இருக்கும். சாதகமான தீர்ப்புகளால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.* ஆசிரியர்கள் ஜூலை 7க்கு பிறகு சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும்.* பொதுநல சேவகர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு, புகழ், பாராட்டு கிடைக்கும்.* விவசாயிகளுக்கு மானாவாரி பயிர்கள் அதிக மகசூல் கிடைக்கும். பாசிப்பயறு, துவரை, பழவகைகள் மூலம் அதிக வருமானம் கொடுக்கும்.* பால்பண்ணை தொழிலில் கால்நடைவளர்ப்பின் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும். * பள்ளி, கல்லுாரி மாணவர்கள் படிப்பில் முன்னேறுவர். சுமாரான பலன்கள்* தொழிலதிபர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அரசு வகையில் அனு கூலமான போக்கு காணப்படவில்லை.எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.  சிலருக்கு பொருளாதார இழப்பு ஏற்படலாம். * வியாபாரிகளுக்கு பணம், பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். வாகனப் பயணத்தின் போது கவனம் தேவை.* தரகு, கமிஷன் தொழிலில் சிறுசிறு தடைகள் குறுக்கிடலாம்.* ஐ.டி. துறையினர் பணிச்சுமையால் அவதிப்படுவர். முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் பொறுப்புடன் செய்யவும்.* மருத்துவர்கள் தற்காலிகமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.  * அரசு ஊழியர்கள் வேலையில் அதிக கவனமுடன் இருக்கவும். சிலர் திடீர் இடமாற்றத்தைச் சந்திக்கலாம்.* போலீஸ், ராணுவத்தினருக்கு திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.* அரசியல்வாதிகளுக்கு தலைமையின் எதிர்ப்பு ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் மன உளைச்சலுடன் காணப்படுவர்.* கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் தொல்லை ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.* விவசாயிகள்  சொத்து வாங்க சிலகாலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும்* கல்லுாரி மாணவர்களில் சிலர் ஜூன் 21 – ஜூலை 3 வரை  கெட்டசகவாசத்திற்கு ஆளாகலாம் கவனம்.நல்ல நாள்: ஜூன் 16,17,18,19,20,26,27,28,29 ஜூலை 2,3,6,7,8,14,15கவன நாள்: ஜூன் 21,22 சந்திராஷ்டமம் அதிர்ஷ்ட எண்: 1,5 நிறம்: பச்சை, மஞ்சள்பரிகாரம்:* ஞாயிறன்று சூரியனுக்காக கோதுமை தானம் * சனியன்று விரதமிருந்து அனுமன் வழிபாடு* செவ்வாயன்று கந்தசஷ்டி கவசம் படித்தல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !