செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :1940 days ago
கடலுார் : கடலுார் வண்டிப்பாளையம் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கடலுார் வண்டிப்பாளையம் கண்ணகி நகரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, கோவிலில் சிறப்பு ேஹாமங்கள், யாக சாலை பூஜைகள் நேற்று முன்தினம் நடந்தது. நேற்று காலை சிறப்பு பூஜைகள், கடம் புறப்பாடு தொடர்ந்து, கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபி ேஷகம் நடந்தது. மூத்த வக்கீல் சிவமணி தலைமையில் நடந்த கும்பாபிஷேகத்தில் வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா முகுந்தன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.