உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துாய்மை பணிக்காக கோவில்களில் ஆலோசனை பெட்டி

துாய்மை பணிக்காக கோவில்களில் ஆலோசனை பெட்டி

 சென்னை; துாய்மை பணி தொடர்பான கருத்துக்களை கேட்டறிய, கோவில்களில் ஆலோசனை பெட்டி வைக்க, அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கால், கோவில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், தினசரி கோவில்களின் நடை திறந்து, நித்ய பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், 8ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க, மத்திய அரசு உத்தரவிட்டது.இதையடுத்து, பல மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. தமிழகத்தில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமய தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய அரசு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிப்பதை தள்ளி வைத்துள்ளது.

இந்நிலையில், கோவில் வளாகங்களில் துாய்மை பணி மேற்கொள்வது, கொரோனா தடுப்புப்பணி ஏற்பாடுகளை செய்வது குறித்து, அறநிலைய துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும் கோவில்களில், ஆலோசனைப் பெட்டி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பல்வேறு கோவில்களில், பெட்டிகள் வைக்கப்பட்டு வருவதாக, அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !