மருந்தீசர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
ADDED :1940 days ago
வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி, சென்னகிரி, மருந்தீசர் கோவிலில், கடந்த மார்ச், 6ல், புதிதாக, காலபைரவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. மண்டல பூஜை தொடங்கி நடந்து வந்த நிலையில், ஊரடங்கால், பக்தர்கள் அனுமதிக்கப்படாமல், அர்ச்சகர்களால் நித்ய பூஜை மட்டும் நடந்துவருகிறது. இதனால், மண்டலபூஜை நிறைவு செய்வது தடைபட்டது. சிலை பிரதிஷ்டை செய்து, 100ம் நாளான நேற்று, மருந்தீசருக்கு முன், 11 கலசங்களில் புனிதநீர் வைத்து, யாக பூஜை செய்து, நிறைவு விழா நடந்தது. அதில் வைத்து பூஜித்த நீரால், மூலவர் ஈசன், காலபைரவருக்கு அபி?ஷகம் செய்யப்பட்டது. நிறைவு விழாவிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல், சிவாச்சாரியார்கள் மட்டும் பங்கேற்றனர்.