தமிழ் வருட பஞ்சாங்கம் வெளியீடு
ADDED :1941 days ago
கரூர்: கரூரில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்) சார்பில் தமிழ் வருட பஞ்சாங்கம் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் ஸ்ரீதரன், பஞ்சாங்கத்தின் முதல் பிரதியை வெளியிட, செயற்குழு உறுப்பினர் மகாதேவன் பெற்று கொண்டார். ஆண்டுதோறும் தமிழ் வருடம் சித்திரை, 1ல் பஞ்சாங்கம் வெளியிடப்பட்டு வரும் நிலையில், கொரோனா ஊரடங்கு தடை உத்தரவு காரணமாக, தாமதமாக பஞ்சாங்கம் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், சமூக இடைவெளியுடன் சார்வரி வருட பஞ்சாங்கத்தை வெளியிட்டனர். மாவட்ட ஆலோசகர் வீரமணி, காந்திகிராமம் கிளைத் தலைவர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.