மருதமலை கோவிலுக்கு புதிய துணை ஆணையர் பொறுப்பேற்பு
ADDED :1941 days ago
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலின், புதிய (பொ) துணை ஆணையராக, ஹரிஹரன் பொறுப்பேற்றுள்ளார். முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு, கடந்த சில ஆண்டுகளாக, தனி அலுவலர் நியமிக்கப்படாமல், பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். மருதமலை கோவிலில், கடந்த ஓராண்டாக, உதவி ஆணையர் மேனகா கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இந்நிலையில், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் உதவி ஆணையர் ஹரிஹரனை, கூடுதல் பொறுப்பாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, மருதமலை கோவிலின், பொறுப்பு துணை ஆணையராக, ஹரிஹரன் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக்கொண்டார்.