உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி

உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி

சொல்கிறார் ராமகிருஷ்ணர்

* கண்ணாடி போல கண்கள் இரண்டும் உள்ளத்தில் இருப்பதை அப்படியே மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி விடும்.   
* பிறரிடம் பலன் எதிர்பார்த்து அன்பு செலுத்துவது கூடாது. கைமாறு கருதாத அன்பே துாய்மை மிக்கது.      
* ஆணவம் நிழல் போல மனிதனை விடாமல் பற்றி இருக்கிறது. அதை அகற்றுவது எளிதானது அல்ல.      
* அவித்த நெல் மீண்டும் முளைப்பதில்லை. அதுபோல ஆசையற்ற ஞானிகள் மண்ணில் மீண்டும் பிறப்பதில்லை.       
* பெற்றோர் மீது அன்பு இல்லாதவன்,  கடவுளின் அருளுக்குப் பாத்திரமாக முடியாது.        
* கடவுளை வணங்க வெறும் பூஜை முறைகள் பயனில்லை. முதலில் மனத்தைச் சுத்தமாக்குங்கள்.
*  பணத்திற்காக ஏங்கித் தவிக்கிறோம். ஆனால், கடவுளுக்காக நாம் யாரும் அழத் தயாராயில்லை.
*  பற்று, தாய்க்கு தன் குழந்தையிடம் உள்ள பாசம், மனைவி மீதுள்ள காதல் ஆகியன மிக ஆழமானவையாகும். அதுபோல் இம்மூன்று கவர்ச்சிகளும் ஒருங்கே ஒருவனுக்கு கடவுளிடத்தில் அமையுமானால், அந்த மனஆற்றலே அவனை கடவுளிடத்தில் சேர்த்து விடும்.
* கண்ணாடியில் அழுக்கு படிந்திருந்தால் உருவம் தெரியாதது போல, மனதில் அழுக்கு படிந்திருந்தால் கடவுள் தெரிய மாட்டார்.
* கடவுளால் தான் எல்லாம் நடக்கிறது என்ற எண்ணம் வரும் வரையில் மனிதனுக்கு பிறவிகள் தொடரும்.
* கடவுள் மனிதனின் மனதில் தங்கியிருக்கிறார். அந்த விடுதியை பத்திரப்படுத்திக் கொள்வது தான் நம் தலையாய கடமை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !