கீதை காட்டும் பாதை
ADDED :1987 days ago
அபி சேத்ஸுதுராசாரோ
பஜதே மாமநந்யபாக்!
ஸாது ரேவ ஸ மந்தவ்ய:
ஸம்யக் வ்யவஸிதோ ஹி ஸ:!!
க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா
ஸஸ்வச்சாந்திம் நிகச்சதி!
கெளந்தேய ப்ரதி ஜாநீஹி
நமே பக்த: ப்ரணஸ்யதி!!
பொருள்
தீய நடத்தை கொண்டவனாக இருந்தாலும், வேறு எதிலும் நாட்டம் இல்லாமல் என் பக்தனாக மாறி விட்டால், அவன் நல்லவனாகவே கருதப்படுவான். ஏனெனில் பகவானைப் பூஜிப்பதைக் காட்டிலும் சிறந்தது வேறில்லை என்னும் நல்ல தீர்மானத்திற்கு அவன் வந்து விட்டான். விரைவில் தர்மத்தின் பாதையில் சென்று அமைதி, நிம்மதியை அடைவான். அர்ஜுனா! என் பக்தனுக்கு அழிவில்லை என்னும் உண்மையை உணர்ந்து கொள்.