இது என்ன கம்ப சூத்திரமா -இதன் பொருள் என்ன?
ADDED :1985 days ago
கம்ப சித்திரம் என்பதே கம்ப சூத்திரமாக மாறி விட்டது. தமிழ் காப்பியங்களில் மிகவும் உயர்ந்தது கம்பராமாயணம். இதில் ஆன்மிகம், உலகியல், பகுத்தறிவு, இலக்கணம், இலக்கியம் என எல்லாம் உள்ளன. இதனை இயற்றியவர் கம்பர். பெரிய இலக்கிய சித்திரமாகிய ராமாயணத்தை ‘கம்பசித்திரம்’ என்று குறிப்பிட்டனர். யாராலும் சாதிக்க முடியாத அரும்பெரும் சாதனைக்கு உதாரணமாக கம்பசித்திரம் விளங்குகிறது.