உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூர் பட்டீஸ்வரர் தேர்கள் ஷெட்ல் வெள்ளோட்டம்

பேரூர் பட்டீஸ்வரர் தேர்கள் ஷெட்ல் வெள்ளோட்டம்

பேரூர்: பேரூர் கோவில் தேர்களுக்கு அமைக்கப்படும் ஷெட்ல், தேர்களை நிலை நிறுத்தி, நேற்று சோதனை செய்யப்பட்டது.

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் நடைபெறும். நடப்பாண்டு விழா, கொரோனா வைரஸ் பரவலால் ரத்தானது. இந்நிலையில், ரூ. 64 லட்சம் மதிப்பீட்டில், 18 மீ., உயரம், 12மீ., அகலம், 24மீ., நீளத்தில், தேர்களுக்கு நிரந்தர ஷெட் அமைக்கும் பணி, கடந்த ஆண்டு துவங்கியது. ஊரடங்கு தளர்வு காரணமாக, ஷெட் அமைக்கும் பணிகள் வேகமெடுத்தன. கடந்த வாரத்தில், ராட்சத கிரேன்களின் உதவியுடன், துாண்கள் அமைக்கும் பணி நடந்தது. நேற்று காலை, 8:30 மணிக்கு, தேர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.பின்னர், பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன், தேர்கள் ஷெட்ல் நிலை நிறுத்தி, சோதனை செய்யப்பட்டது. சில வாரங்களில் பணிகள் நிறைவு பெறும் என, தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !