பராமரிப்பில்லாத கோவில் குளம் சீரமைக்க நடவடிக்கை தேவை
ADDED :1943 days ago
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் பராமரிப்பில்லாத கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உளுந்துார்பேட்டை, கந்தசாமிபுரம் பகுதியில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான தெப்பகுளம் உள்ளது. இந்த குளம் தற்போது பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால், குளத்தில் பாசி படிந்து, குளத்தைச் சுற்றிலும் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. கோவில் குளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.