விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED :2300 days ago
திருவாரூர்: சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இங்கு சிவன் மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 153 வது தேவாரத்தலம். இங்கு சூரிய கிரகணத்தை முன்னிட்டு, சிறப்பு அலங்கார அபிேஷகம் நடைபெற்றது.