உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி

திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், சூரிய கிரகணத்தையொட்டி, தீர்த்தவாரி நடந்தது. சூரிய கிரகணம் துவங்கும் முன்பும், சந்திர கிரகணம் நிறைவு பெற்ற பின்பும், திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீர்த்தவாரி நடப்பது வழக்கம்.இதன்படி, சூரிய கிரகணம், நேற்று காலை, 10:22 மணிக்கு துவங்கி, மதியம், 1:32 மணிக்கு முடிந்தது. இதையொட்டி, அருணாசலேஸ்வரர் கோவில் பிரம்ம தீர்த்தத்தில், காலை, 10:00 மணிக்கு, சூல வடிவிலான அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நடந்தது.இதையொட்டி, சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. ஊரடங்கால், கோவில் நடை சாத்தப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !