பஞ்சஹ்ருதய பரமானந்த தாண்டவம்!
ADDED :1975 days ago
நடராஜ பெருமான் ஆடும் நடனத்திற்கு பஞ்சஹ்ருதய பரமானந்த தாண்டவம் என பெயர். நடராஜர் தனது கையில் பிடித்திருக்கும் டமருகம் என்ற வாத்தியம் எழுப்பும் ஒலியினால்தான் சிருஷ்டி உண்டாகிறது. அதாவது உலகம் படைக்கப்படுகிறது. இன்னொரு கையில் இருக்கும் அக்னியால் தான் படைத்த உயிர்களை சம்ஹாரம் செய்கிறார். முயலகன் மீது ஊன்றியிருக்கும் வலதுபாதம் அவரது அரசாட்சியையும், இடது திருவடியை துõக்கி காட்டி அதை பிடித்துக்கொண்டால் மோட்சம் கிடைக்கும் என்றும் சொல்கிறார்.