பரமக்குடி கோயிலில் சம்பக சஷ்டி விழா; விபூதியில் அலங்காரத்தில் பைரவர்
ADDED :1 hours ago
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள சிவன் மற்றும் முருகன் கோயில்களில் பைரவருக்கு சம்பக சஷ்டி விழா நடக்கிறது.
பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் சம்பக சஷ்டி விழா நேற்று துவங்கியது. தனிச் சன்னதியில் அருள்பாலிக்கும் பைரவருக்கு அபிஷேகம் நடந்து விபூதியில் வெள்ளை சாத்தி அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து தினமும் பச்சை, சிவப்பு, வெண்ணெய் உள்ளிட்டவைகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெறும். *பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத சம்பக சஷ்டி பெருவிழா நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வரும் அமாவாசைக்கு மறுநாள் சம்பக சஷ்டி விழா எடுப்பது வழக்கம். இங்கு தினமும் காலை அபிஷேகம், மாலை அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.