உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேக விழா

ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேக விழா

 ரிஷிவந்தியம்: கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 27ம் தேதி நடக்கிறது.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆன்மீக சுற்றுலா தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த 1,500 ஆண்டுகள் பழமையான ரிஷிவந்தியம் முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. விஜய நகர மன்னர்கள்‌ காலத்தில்‌ விவசாயம்‌ செய்வதற்காக காடு வெட்டும்‌ போது மண்வெட்டியில்‌ வெட்டுப்பட்டபோது சுயம்பு லிங்கம் மீட்கப்பட்டது. இந்த சுயம்பு லிங்கம் தற்போது கோவில் மூலவராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மூலவர் சுவாமி சிலையில் வெட்டுப்பட்ட கீறல் தற்போதும் உள்ளது. சைவ சமய குறவர்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர்‌, மாணிக்கவாசகர் ஆகியோர் இக்கோவிலில் வழிபட்டுள்ளனர்‌. தினமும் காலையில் மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு நடைபெறும் தேனபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அப்போது, இடைநெளிந்த நிலையில் சிவனும், பார்வதி தேவியும் ஒளி வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறனர். திருமண தடை நீக்கும் ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலில் ஆனி மாதம் தேர்திருவிழாவும், சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி மற்றும் சூரசம்ஹார பூஜைகள் சிறப்பாக நடக்கிறது. மாவட்டத்தின் முக்கியமான ஆன்மீக சுற்றுலா தளங்களில் ஒன்றான அர்த்தநாரீஸ்வரர் கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முயற்சியால் அறநிலையத்துறை சார்பில் கோவில் திருப்பணிக்கு ரூ. 66 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இறுதி கட்டப்பணிகள் நடைபெறும் நிலையில் விழாவிற்கான ஏற்பாடுகளை ஹிந்து அறநிலை துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !