கொரோனாவிலிருந்து விடு பட திருநள்ளாறு சனீஸ்வரனுக்கு சிறப்பு பூஜை
காரைக்கால்: கொரோனா வைரஸிலிருந்து அனைத்து மக்களையும் காக்கும் வகையில் சனீஸ்வர பகவான் கோவிலில் சனீபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று.
காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.இதனால் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் பகவானை தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவால் கோவில்கள் கடந்த 80 நாட்களாக அடக்கப்பட்டு கடந்த 8ம் தேதி மீண்டும் புதுச்சேரி அரசு பாதுகாப்பு வழிகாட்டி கோவில் திறக்கப்பட்டது. இதனால் உள்ளூர் பக்தர்கள் ஒரு சிலர் மட்டும் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் வெளியூரில் இருந்து பக்தர்கள் யாரும் வரவில்லை. சனிக்கிழமை என்பதால் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பீதி அதிகம் காணப்பட்டு வருவதால் அரசு கடுமையான கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் வருகை இல்லாமல் திருநள்ளாறு கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.