பழநியில் கிரிவலம் வந்து வழிபடும் பக்தர்கள்
ADDED :1959 days ago
பழநி : கொரோனா பரவலை தடுக்க, அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடியுள்ளன. கோயிலை திறக்காததால் உள்ளூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இருப்பினும் காலை, மாலையில் கிரிவலம் சுற்றி வரும் பக்தர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இவர்களை, முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.