உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன பூஜை

பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன பூஜை

கடலுார், : கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி உற்சவர் நடராஜர், சிவகாம சுந்தரி, மாணிக்கவாசகருக்கு நேற்று காலை 7:30 மணிக்கு மஞ்சள் பொடி, தேன், பால், சந்தனம், விபூதி, இளநீர் என 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.பின்னர், புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !