ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 5ம் ஆண்டு சிறப்பு பூஜை
ADDED :2023 days ago
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 5ம் ஆண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆலங்குப்பம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஜகதீஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் 5ம் ஆண்டு சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. அதனையொட்டி, நந்தி பகவானுக்கு பால், தயிர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட திரவியங்களில் அபிஷேகம் செய்து மகா தீபராதானை நடத்தப்பட்டது. கொரோனா தொற்று காரணத்தினால் பக்தர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என குறிப்பிடத்தக்கது.