திந்திரிணீஸ்வரர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம் ரத்து: பக்தர்கள் ஏமாற்றம்
ADDED :2023 days ago
திண்டிவனம் : திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம் ரத்து பக்தர்கள் ஏமாற்றம்.திண்டிவனத்தில் பிரசித்திப்பெற்ற சிவன் கோயில் தெருவில் உள்ள திந்திரிணீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் திருமஞ்சன உற்சவம் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், திண்டிவனத்தில் கொரோனா தொற்று அதிகாரித்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்களின் நலன் கருதி கோவில்களை திறக்க அரசு தடைவிதித்துள்ளது. இதனால் ஆனித்திருமஞ்சனம் விழா நடைபெறாமல் திந்திரிணீஸ்வரர் கோவில் மூடப்பட்டது. சுவாமியின் அபிஷேக ஆராதணையை காணமுடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.