கைவிட்ட பொருள் கிடைக்க....
ADDED :1967 days ago
ஆனிமாத வளர்பிறை ஏகாதசிக்கு ‘நிர்ஜலா ஏகாதசி’ என்று பெயர். வியாசரின் வழிகாட்டுதலால், பாண்டவரில் ஒருவரான பீமன் தண்ணீர் குடிக்காமல் விரதமிருந்ததால் இப்பெயர் வந்தது. ‘நிர்ஜலா’ என்பதற்கு ‘தண்ணீர் இல்லாமல்’ என்பது பொருள். இந்நாளில் (ஜூலை 1) காலையில் நீராடி நெய் விளக்கேற்றி பெருமாளை வழிபட வேண்டும். துளசிமாலை சாத்துவது சிறப்பு. இதற்கு ‘பீம ஏகாதசி’ என்றும் பெயருண்டு. இதன் பயனாக பாண்டவர்களுக்கு இழந்த ராஜ்ஜியம் கிடைத்தது. இழந்த சொத்து, கை விட்டுப் போன பொருள் கிடைக்க இந்த விரதமிருக்கலாம்.