திருப்பரங்குன்றத்தில் ஊஞ்சல் உற்ஸவ பூஜை
ADDED :2024 days ago
திருப்பரங்குன்றம் : கொரோனா ஊரடங்கால் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் 100 நாட்களுக்கு மேலாக பூட்டப்பட்டு, கால பூஜைகள் மட்டும் நடக்கின்றன. பங்குனி, வைகாசி விசாக திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டன. ஜூன் 25 துவங்கி ஜூலை 4 வரை நடக்க வேண்டிய ஊஞ்சல் திருவிழா ரத்து செய்யப்பட்டு, சுவாமி ஊஞ்சல் ஆட்டத்திற்கு பதிலாக தினம் சேர்த்தியிலேயே ஊஞ்சல் உற்ஸவ பூஜை நடந்தது. உச்ச நிகழ்ச்சியாக நேற்று முப்பழ பூஜைகள் தவிர்க்கப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை முன் புனிதநீர் அடங்கிய குடம் வைத்து யாகபூஜைகள் நடந்தன. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.