உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூசாரிகளுக்கு மாத சம்பளம் : கோ வம்சத்தார் வலியுறுத்தல்

பூசாரிகளுக்கு மாத சம்பளம் : கோ வம்சத்தார் வலியுறுத்தல்

திருப்பூர்; இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, கோவில் பூசாரிகளுக்கு, மாத சம்பளம் வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து, தமிழ்நாடு கோ வம்ச ஆண்டிப்பண்டாராத்தார் சமூக முன்னேற்ற நலச்சங்க நிர்வாகிகள், அறநிலையத்துறை உதவி கமிஷனரிடம் கொடுத்த மனு:ஊரடங்கை தளர்த்தி, கிராமப்புறத்தில் உள்ள, 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வருவாய் உள்ள கோவில்களில், பக்தர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதே போல், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, நகர்ப்புற கோவில்களிலும் பக்தர் தரிசனத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்.கோவில் பணியாளர், பூசாரிகளுக்கும், கையுறை, முக கவசம், சானிடைசர் வழங்க வேண்டும். கோவில் பூசாரிகளுக்கு, கோவில் நிதியில் இருந்து, 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருவாய் உள்ள கோவில் பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு, மாத சம்பளம் வழங்க வேண்டும். பூசாரி கள் நலவாரியத்தையும் முறையாக செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !