ஏன் இந்த அதிக மதிப்பு
ADDED :1962 days ago
இரண்டு கல்விமான்கள் முல்லாவைச் சந்தித்து உரையாடினர்.
அவர்களில் ஒருவர், ”முல்லா அவர்களே! உலகில் பொய்யை விட உண்மைக்கு மதிப்பு அதிகமாக இருக்கிறதே ஏன்?” எனக் கேட்டார்.
‘‘நானும் பதிலுக்கு ஒரு கேள்வி கேட்கிறேன் உலகில் இரும்பைவிடத் தங்கத்துக்கு மதிப்பு அதிகம் ஏன்? எனக் கேட்டார்.
‘‘இரும்பு தாரளமாக கிடைக்கிறது. அதனால் அது குறைவாக மதிக்கப்படுகிறது. தங்கம் அரிதாக எங்கோ ஒரிடத்தில் கிடைக்கிறது. அதனால் மதிப்பு அதிகம்’‘ என்றார் கல்விமான்.
‘‘இந்த உதாரணம் போதும். உலகில் பொய் தாராளமாக இருக்கிறது. ஆனால் உண்மை பேசுபவர்களைக் கண்டுடிபிடிப்பதே அரிது. அதனால் அதற்கு மதிப்பு அதிகமாக இருக்கிறது’’ என்றார் முல்லா.