உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உக்ர தேவதைகள் அகோரமாகவும், நாக்கை நீட்டிக் கொண்டும் பயமுறுத்தும் விதத்தில் இருக்கின்றனரே. இதற்கு இடம் கொடுத்தது ஏன்?

உக்ர தேவதைகள் அகோரமாகவும், நாக்கை நீட்டிக் கொண்டும் பயமுறுத்தும் விதத்தில் இருக்கின்றனரே. இதற்கு இடம் கொடுத்தது ஏன்?

காளி, துர்க்கை, பைரவர், சரபேஸ்வரர், நரசிம்மர் போன்ற தெய்வங்கள் உக்ரமாகக் காட்சி தருவர். இவர்கள் தீய சக்திகளாகிய அரக்கர்களை அழித்து நம்மைக் காப்பாற்றியவர்கள். உக்கிரமான தீய சக்திகளை அழிக்க தெய்வங்களும் உக்கிரமான வடிவம் எடுக்க வேண்டியதாகிறது. மனிதர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள், தீயவர்களும் இருக்கிறார்கள். தீயவர்களை திருத்துவதற்கு என சட்டம் இருக்கிறது. அதைச் செயல்படுத்த காவல் துறை உள்ளது. திருடர்களைக் கண்டிக்கும் பொழுது காவல் துறையினர் கூட கோபப்பட வேண்டியுள்ளதே! இதற்காக அவர்களை நாம் ஒதுக்கி விட முடியுமா! இது போல்தான் இந்து மதமும்.  விடாப்பிடியாக தவறுசெய்வோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க உக்ரமான தெய்வங்களை வழிபடும் முறையை வகுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !