கந்த சஷ்டி குறித்து விமர்சனம்: ஹிந்து மக்கள் கட்சி மனு
ADDED :1933 days ago
கரூர்: ’தமிழர்களின் முக்கிய தெய்வமான முருகனின் கந்த சஷ்டி குறித்து, விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் மணி, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: ஹிந்துக்களின் புனித கடவுள் மற்றும் தமிழர்களின் முக்கிய தெய்வமாக முருகன் வணங்கப்பட்டு வருகிறது. ஆனால், முருகன் கடவுளை இழிவுபடுத்தும் விதமாக கந்த சஷ்டி பாடலை விமர்சனம் செய்து சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு வருகிறது. இது, ஹிந்துக்கள் மனம் புண்படும் படி உள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறப்பட்டுள்ளது.