சமயபுரம் மாரியம்மனுக்கு அமாவாசை அபிஷேகம்
ADDED :2011 days ago
திருச்சி: ஆடி அமாவாசையை முன்னிட்டு, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உற்சவருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் அருள்பாலித்தார். கொரோனா காரணமாக ஒரே இடத்தில், அதிகளவில் மக்கள் கூடுவதால், தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது. இதனால், மக்கள் நலன் கருதி, கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியளிகப்படவில்லை.