பாண்டமங்கலம் சிவன் கோவில்களில் சனி பிரதோஷ விழா
ADDED :2008 days ago
ப.வேலூர்: சனி பிரதோஷத்தை முன்னிட்டு, ப.வேலூர் அடுத்த பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஸ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், சக்தி விநாயகர் கோவிலில் உள்ள அண்ணாமலையார் உள்ளிட்ட கோவில்களில் உள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, சிறப்பு அலங்காரம் நடந்தது. கொரோனா தொற்று காரணமாக ஆறாம் கட்ட ஊரடங்கு உள்ளதால், குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தர்கள் வந்திருந்தனர். முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் சுவாமியை தரிசனம் செய்தனர்.