விநாயகர் சதுர்த்தி ஆலோசனை
ADDED :1905 days ago
பொங்கலுார்: பொங்கலுார் அருகில் தேவனம்பாளையம் சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு, மன்ற தலைவர் கருப்புசாமி தலைமை வகித்தார். கொரோனா வைரஸ் காரணமாக விநாயகர் சதுர்த்தியை எளிமையாக கொண்டாடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், செயலாளர் சிவக்குமார், துணை பொருளாளர் தமிழரசன், துணை தலைவர் சந்தோஷ்குமார் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.