உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி அமாவாசை: கோவில்களில் வழிபாடு

ஆடி அமாவாசை: கோவில்களில் வழிபாடு


மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலை புதூரில் இருக்கும் வீரகாரன், புடவை காரியம்மன் கோவிலில், நேற்று, சோமவார ஆடி அமாவாசையை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பகல், 12:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கபட்டது.

* அதேபோல், எலச்சிபாளையம் ஒன்றியம், மணலிஜேடர்பாளையத்தில் இருக்கும், கருணாம்பிகை அம்மை, ஆதிநாக அருளீஸ்வரர் கோவில், மல்லசமுத்திரம் ஒன்றியம், கருங்கல்பட்டி அண்ணா நகரில் இருக்கும் அழகு முத்துமாரியம்மன், மதுரை வீரன் சுவாமி கோவில்களிலும் ஆகம விதிகளின்படி, சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !