சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :5260 days ago
தாடிக்கொம்பு:சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று, தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு ஐந்து கால பூஜைகள் நடந்தன. மஞ்சள் காப்பு மற்றும் செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. பைரவர் ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்தார். செயல் அலுவலர் வேலுச்சாமி, பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.