ஓம் நமசிவாய ஜபித்தால் என்ன நன்மை உண்டாகும்?
ADDED :1997 days ago
எல்லாம் நலமாக நடக்கும். மந்திர ரத்னம் என்று அருளாளர்கள் இதை போற்றுவர். ஒருவரிடம் உயர்ந்த ரத்தினம் இருந்தால் அதிர்ஷ்டமும், செல்வமும் பெருகுவது போல நமசிவாய மந்திரத்தை ஜபிப்பதால் நன்மை பெருகும். நினைத்தது நிறைவேறும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் தேவாரத்தில் பஞ்சாட்சர மந்திர மகிமையை பதிகங்களில் போற்றியுள்ளனர்.