பூட்டிய கோயிலில் வெளியே நின்று வழிபடலாமா?
ADDED :1993 days ago
தரிசனத்திற்காக சென்ற நேரத்தில் சன்னதியில் திரை இட்டிருந்தாலும், கதவு சாத்தியிருந்தாலும் வழிபாடு செய்யக் கூடாது என்பது பொதுவிதி. ஆனால் பூட்டிய கோயில் வழியாக செல்ல நேரிட்டால் ஒரு நிமிடம் நின்று கோபுரத்தை வழிபடுவது சிறப்பான விஷயம். இதனால் செல்லும் பணி சிறப்பாக முடியும். இதனால் ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்று சொல்வர்.