குறை தீர்க்கும் குங்குமக்காளி!
சிவனுடன் போட்டி நடனமிட்ட பார்வதி, கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் தில்லைக்காளியாக அருள்பாலிக்கிறாள். குங்கும அர்ச்சனை செய்தவருக்கு குறை தீர்ப்பவளாகத் திகழ்கிறாள்.
சிவனுக்கும், பார்வதிக்கும் நடந்த நடனப்போட்டியில், சிவன் ஒருகாலைத் துாக்கி ‘ஊர்த்துவ தாண்டவர்’ என்ற பெயரில் தாண்டவம் ஆடினார். ஆனால் பெண்மைக்குரிய நாணத்தால் அவளால் இயலவில்லை. இதனால் தோற்றாள். இதையடுத்து காளியின் கோபம் அதிகரித்தது. அவளை அமைதிப்படுத்த விரும்பிய பிரம்மா, ‛வேதநாயகி’ எனப் புகழ்ந்து பாடி, நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையில் உருவத்தை மாற்றும்படி வேண்டினார். அவளும் ‘பிரம்ம சாமுண்டீஸ்வரி’ என்ற பெயரில் நான்கு முகத்துடன் காட்சி தந்தாள். நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி சாந்த சொரூபிணியாக இந்த அம்மனுக்கு சன்னதி இங்குள்ளது.
தட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் ‘கடம்பவன தக்ஷணரூபிணி’ என்ற பெயரில் அருள்கிறாள். விரிந்த கூந்தலுடன் கல்லால மரத்தடியில் அமர்ந்திருக்க, அருகில் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய முனிவர்கள் உள்ளனர். நின்ற கோலத்தில் சரஸ்வதி ‘வீணை வித்யாம்பிகை’ என்னும் பெயரில் அருள்கிறாள்.
விசேஷ நாட்கள்: ஆடிவெள்ளி, ஆடி அமாவாசை, நவராத்திரி, மகாசிவராத்திரி
நேரம்: காலை 6.30 –12:00, மாலை 4.30 – இரவு 8.30 மணி.
தொடர்புக்கு: 04144 – 230 251