நிம்மதியா துாங்கணுமா
ADDED :1936 days ago
கனவால் துாக்கம் தடைபடும். சிலருக்கு தீய கனவுகளால் நிம்மதி கெடும். இதற்கு தீர்வு பெற கருடனை வழிபடுவதும், தினமும் கருட மந்திரம் ஜபிப்பதும் நல்லது.
‘குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச!
விஷ்ணு வாஹ நமஸ்துப்யம் க்ஷேமம் குரு ஸதா மம!!
பொருள்: விஷ்ணுவின் வாகனமாகத் திகழும் கருடனே! குங்குமம் போல சிவப்பாக இருப்பவரே! தும்பைப் பூ, சந்திரன் போல வெள்ளை நிற கழுத்தை உடையவரே! என்னை எப்போதும் காத்தருள வேண்டுகிறேன்.