உலகளந்த பெருமாள் கோவிலில் ஆண்டாள் ஆடிபூர விழா
ADDED :2059 days ago
திருக்கோவிலூர், திருக்கோவிலூர், உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பெருமாள், ஆண்டாள் சிறப்பு வைபவம் நடந்தது.
திருக்கோவிலூர், உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று காலை 5:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:30 மணிக்கு நித்திய பூஜை, 8:00 மணிக்கு ஆண்டாள் சமேத தேகளுச பெருமாள், பெரியாழ்வார்க்கு விசேஷ அலங்கார திருமஞ்சனம், சேவை சாற்றுமுறை தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது. மூலவர் ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஆடி வெள்ளிக் கிழமையும் சேர்ந்து வந்ததால் மூலவர் புஷ்பவல்லி தாயார், பூங்கோவல் நாச்சியாருக்கு விசேஷ அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. ஜீயர் ஸ்ரீனிவாசராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில், பக்தர்கள் இன்றி பட்டாச்சாரியார்கள் மட்டுமே விழாவில் கலந்து கொண்டனர்.